
எதிர்வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மந்திரிபுசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி (Amiruddin Shari ) கோம்பாக் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடும் என பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோடிகாட்டியுள்ளார். பி.கே.ஆர் கட்சியின் சிலாங்கூர் தளபதி கோம்பாக் நாடாளுமன்ற தொகுதியில் களம் இறக்கப்படுவார் என பி. கே.ஆர் தலைவருமான அன்வார் தெரிவித்திருக்கிறார். பி.கே.ஆர் கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்டோபர் 28ஆம் தேதி வெளிவரும் என அவர் கூறினார்.
கோலா சிலாங்கூர், கம்போங் அசாம் ஜாவா மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அன்வார் இத்தகவலை வெளியிட்டார்.
