28.5 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

நிக் அசிஸின் மகனை களமிறக்குகிறது PKR

பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவர் மறைந்த நிக் அப்துல் அசிஸ் நிக் மாட்டின் ( Nik Abdul Aziz Nik Mat) மகன் , நிக் ஓமார், 15-வது பொதுத் தேர்தலில் , PKR கட்சியின் சார்பில் போட்டியிடவிருக்கிறார். அவர் பேராக்கில் போட்டியிடவிருப்பதாக , அக்கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இன்று சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நிக் ஓமாருடன் அக்கட்சியின் சார்பில் போட்டியிடவிருக்கும் மேலும் ஐந்து வேட்பாளர்களின் பெயர்களையும் அன்வார் அறிவித்தார். இதனிடையே, சட்டமன்ற – நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் முழு விபரங்கள் இந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படுமென அன்வார் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles