
கேமரன் மலையில் Brinchang கில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்திலிருந்து காயம்அடைந்த அறுவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் உள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்திருக்கிறார். அவர்களில் ஹெலிகாப்டர் ஓட்டுனரும் கிந்தா மாவட்ட சுகாதாரத் துறையின் ஐந்து ஊழியர்களும் அடங்குவர் அவர் தெரிவித்தார். காயம் அடைந்தவர்களை கைரி ஜமாலுடின் இன்று நேரில் சென்று பார்வையிடுவார். இதனிடையே அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பேரா போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யுஸ்ரி ஹசான் கூறினார். பறக்கும் மருத்துவர் பிரிவைச் சேர்ந்த ஒரு மருத்துவ அதிகாரி, துணை மருத்துவ அதிகாரி, சமுக தாதி ஒருவர் மற்றும் ஹெலிகாப்டர் ஓட்டுனர் ஆகியோர் Kelantan, Gua Musang கிலுள்ள பூர்வ குடிகள் கிராமத்திற்கு வழக்கமான மருத்துவ வருகைக்கு பின் ஈப்போ Tanjung Rambutan னுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது அந்த ஹெலிகாப்டர், பேரா – பகாங் எல்லைக்கு அருகே விபத்துக்குள்ளானதாக முகமட் யுஸ்ரி ஹசான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
