29.9 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

பொதுத் தேர்தலின் போது வானிலையை இப்போதைக்கு கணிக்க முடியாது- வானிலை ஆய்வுத் துறை கூறுகிறது

🔥 Views : 6
👁 Reading Now : 27

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் 15வது பொதுத் தேர்தலின் போது வானிலை எவ்வாறு இருக்கும் என்பதை இப்போதைக்கு கணிக்க முடியாது என்று வானிலை ஆய்வுத் துறை கூறியுள்ளது. இம்மாதம் 3 ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் வரை நீடிக்கும் பருவமழையின் நகர்பு கட்டத்தில் நாடு இன்னும் உள்ளதால் அப்போது வானிலை எவ்வாறு இருக்கும் என்பதை நிர்ணயிக்க இயலாத சூழல் உள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் (வியூக மற்றும் நுட்ப) பிரிவு துணைத் தலைமை இயக்குநர் டாக்டர் முகமது ஹிஷாம் முகமது அரிப் கூறினார். vவரும் நவம்பர் 5 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் நடைபெறவுள்ள நிலையில் இன்னும் பத்து நாட்கள் இடைவெளி உள்ளது. அன்றைய தினம் வானிலை நன்றாக இருக்குமா அல்லது மோசமாக இருக்குமா என்பதை தீர்மானிப்பது கடினம் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles