26.4 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

பக்காத்தானிடமிருந்து ஒரு நாடாளுமன்ற தொகுதியை மட்டுமே பிஎஸ்எம் கோரியது

🔥 Views : 6
👁 Reading Now : 43

மலேசிய சோஷலிஸ கட்சி (பிஎஸ்எம்) பக்காத்தானிடமிருந்து சுங்கை சிப்புட் தொகுதி, இரு சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே கோரியதாக பிஎஸ்எம்மின் முன்னாள் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் தெரிவித்தார்.
ஆனால், இதுவரை எந்தப் பதிலும் சொல்லப்படவில்லை என்று சுங்கை சிப்புட் தொகுதியில் இரு தவணைகளில் எம்பியாகப் பதவி வகித்த மைக்கல் ஜெயகுமார் குறிப்பிட்டார்.
கோரிய தொகுதிகள் கிடைக்கவில்லை என்றால் அது பிஎஸ்எம் கட்சிக்குப் பெரும் அதிருப்தியைத் தரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினையை விவாதிக்க பிஎஸ்எம் சார்பில் ஒருவர் இருக்க வேண்டுமென தமது கட்சி விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles