
சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் புதல்வருக்கு அவரின் பெக்கான் நாடாளுமன்றத் தொகுதி வழங்கப்படும் என்று அம்னோவினர் எதிர்பார்திருந்தது இப்போது பொய்யாகிப் போனது.
அத்தொகுதில் பெராமு ஜெயா சட்டமன்ற உறுப்பினர் Sheikh Mohamed Puzi Ali ஷேய்க் முகமட் புஸி அலி போட்டியிடுவார் என்று தலைவர் ஸாஹிட் ஹமிடி அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.
எனினும், நஜிப்பின் புதல்வர் Mohd Nizar Najib பெராமு ஜெயா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரப்படும் என்று தெரிகிறது. பெக்கான் நஜிப்பின் குடும்பத் தொகுதி என்றும் அவரின் தகப்பனார் Abdul Razak Hussein (அப்துல் ரசாக் ஹுசேய்ன்) 1959லிருந்து அவர் இறந்த 1976ஆம் ஆண்டு வரை அத்தொகுதி உறுப்பினராக இருந்துள்ளார். அதன் பின்னர், நஜிப் ரசாக் அத்தொகுதியைக் கைவசம் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.



