26.4 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

புறக்கணிக்கப்பட்ட ஷஹிடான் காசிம் ஆராவ் தொகுதில் போட்டியிட முடிவு

🔥 Views : 6
👁 Reading Now : 50

அம்னோவின் மூத்த தலைவர்க ளில் ஒருவரான Shahidan Kassim (ஷஹிடான் காசிம்) ஆராவ் தொகுதியில் போட்டியிட முடியாமல் ஒதுக்கப்பட்டதை அடுத்து, தாம் அத்தொகுதியில் நிச்சயமாகப் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.
ஆராவ் தொகுயில் ஷஹிடானுக்கு பதிலாக Rozabil Abd Rahman (ரொஸாபில் அப்துல் ரஹ்மான்) போட்டியிடுவதாக அறிவிக்கப் பட்டுள்ளதால், அத்தொகுதியில் தாம் முவாஃபக்காட் நேஷனலின் வழி போட்டியிடப் போவதாக அறிவித்தார். அத்தொகுதியில் அவர் 3 முறை போட்டியிட்டு வாகை சூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கட்சித் தலைவர் ஸாஹிட் ஹமிடியை மறைமுகமாக எதிர்த்து வந்த ஷாஹிடான் காசிம், Zahidi Zainul Abidin (ஸஹிடி ஸைனுல் அபிடின்), Halimah Sadique (ஹலிமா சாடிக்), Mastura Mohd Yazid (மஸ்துரா முகமட் யாஸிட்) ஆகியோர் தேர்தலில் ஒதுக்கப் பட்டுள்ளனர்.
கட்சியில் பிரிவினையை ஏற்படுத்தி வரும் ஸாஹிட் ஹமிடி பதவியிலிருந்து விலக வேண்டுமென ஷஹிடான் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles