
பொதுத்தேர்தலைப் புறக்கணிக்கும் திட்டம் மஇகாவுக்கு இல்லையென்றும் மஇகாவுக்கு வழங்கப்பட்ட தொகுதிகளைப் பெருமனதோடு ஏற்றுக் கொள்வதாகவும் அதன் தலைவர் எஸ்ஏ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தங்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் தேசிய முன்னணியின் நட்பு கட்சிகளுக்குத் தொகுதிகள் வழங்கப்பட்டிருப்பதை ஏற்றுக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.
பத்து தொகுதி மஇகாவுக்கு வழங்கப் பட்டிருப்பதாகவும் மசீசவின் கோரிக்கைக்கு இணங்க அதனை மாற்றிக் கொள்ள இயலாது என்றும் அவர் தெரிவித்தார்.
மஇகா வெற்றி கொள்ளக்கூடிய, பாரம்பரிய தொகுதியான சுங்கை பூலோவை நல்லிணக்க அடிப்படையில் கைரி ஜமாலுடின் போட்டியிட அம்னோவுக்கு விட்டுத் தர சம்மதித்திருப்பதாகவும் அதே போல காப்பாரும் தாரை வார்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.



