
சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவர் மீது தாம் தொடுத்த நிந்தனை வழக்கில், அவர் தமக்கு இழப்பீடாக 3 லட்சம் ரிங்கிட்டை வழங்க வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாக செ பூத்தே ஜசெக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் Thresa Kok (திரேசா கோக்) குறிப்பிட்டார்.
அந்தத் தொகையை Jamal Yunos (ஜமால் யூனோஸ்) தமக்குச் செலுத்தத் தவறியதை அடுத்து, தாம் அவர் மீது திவால் வழக்கைத் தாக்கல் செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், அவர் சுங்கை பெசார் தொகுதியில் அம்னோ வேட்பாளராகப் குறிப்பிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அது சம்பந்தமாகத் தாம் தேர்தல் ஆணையத்திற்கு புகார் கடிதம் அனுப்பி இருப்பதாகத் தெரிவித்தார்.
திவாலாகும் நிலையில் இருக்கும் ஒருவர் பொதுத்தேர்தலில் போட்டியிட அனுமதி உண்டா என்பதை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டுமென திரேசா கோக் கேட்டுக் கொண்டார்.



