
சுங்கை பூலோ தொகுதியில் அம்னோவின் சார்பில் போட்டியிடும் Khairi Jamaludin (கைரி ஜமாலுடினுக்கு) வாக்களிப்பது ஊழல்வாதியான அமாட் ஸாஹிட்டுக்கு ஆதரவளிப்பது போன்றது என ரபிஸி ரம்லி குறிப்பிட்டுள்ளார்.
கைரி அம்னோ தலைவர்களை எதிர்ப்பார் என்ற அச்சத்தின் காரணமாக அவரை அலைக்கழித்து, இறுதியில் அவரை ஒதுக்கித் தள்ளும் நோக்கத்தில் வேண்டா வெறுப்பாக சுங்கை பூலோ தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.
கைரி வெற்றி பெற்றாலும் அம்னோ தலைமைத்துவத்துக்கு எதிராக தொகுதிக்கு எதையுமே செய்ய முடியாத நிலையில் இருப்பதால் அவருக்கு வாக்களிப்பது பயனில்லை. ஆகவே, தொகுதி வாக்காளர்கள் சிந்தித்து பக்காத்தான் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுமென ரபிஸி கேட்டுக் கொண்டார்.



