
பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியும் பக்காத்தான் ஹராப்பானும் தனித்தனியாக ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், அவை இரண்டும் ஆட்சியமைக்க கூட்டணி வைத்துக் கொள்ளும் என பெர்சத்து தலைவர் Muhyiddin Yassin (முஹிடின் யாசின்) எச்சரித்துள்ளார்.
அம்னோ ஆதரவாளர்கள் இதனை ஏற்க மாட்டார்கள் என்றும், எனவே அவர்கள் பெரிக்காத்தான் நேஷனலை ஆதரிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
அது பற்றிக் குறிப்பிட்ட மலாயாப் பல்கலைக்கழகத்தின் Awang Azman Awang Pawi (அவாங் அஸ்மான் அவாங் பாவி), அவ்விரு கட்சிகளுக்கும் ஆட்சியமைக்க அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார்.



