25.8 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

அனைத்துலக மோசடி வர்த்தகருடன் அப்துல் லத்திப்புக்கு தொடர்பு

🔥 Views : 5
👁 Reading Now : 41

பிரதமர் துறையின் முன்னாள் அமைச்சர் Abdul Latiff Ahmad (அப்துல் லத்திப் அமாட்) பிரெஞ்சுகாரர் Thierry Georges Andre Barrier, (தியெரி ஜோர்ஜஸ் ஆன்ரி பேரரியர்) தோற்றுவித்த மெகா பி ஆசியா நிறுவனம் அனைத்துலக நிலையில் பட்டியலிடப்பட்ட மோசடி வர்த்தகரான Jaya Sudhir Jayaram (ஜெயா சுதிர் ஜெயராமோடு) கூட்டுச் சேர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பதாக ரபிஸி ரம்லி குறிப்பிட்டார்.
அவர்களின் இந்த நிறுவனமே மலேசிய கடற்படையின் பல குத்தகைகளைப் பெற்றதாகவும் அது எல்சிஎஸ் எனப்படும் போர்க் கப்பல் குத்தகையிலும் சம்பந்தப்பட்டிருப்பதாக ரபிஸி சுட்டிக் காட்டியுள்ளார்.
மலேசியாவிலும் ஸ்ரீலங்காவிலும் அரசியல் வாதிகளோடு தொடர்பு வைத்திருக்கும் இந்த ஜெயா சுதிர், ஈராக்கின் முன்னாள் அதிபர் காலத்தில் 10 மில்லியன் டாலர்(47.45 மில்லியன் ரிங்கிட்) உணவுக்கு எண்ணெய் திட்டத்தில் சம்பந்தப்பட்டவர் என்றும் ரபிஸி குற்றம் சாட்டினார்.
மேலும், அவர் முன்னாள் பிரதமர் துன் Abdullah Ahmad Badawi (அப்துல்லா அமாட் படாவி)யின் சகோதரி Noor Aishah (நூர் அயிஷா)வோடு கூட்டுச் சேர்ந்து தொழில் நடத்தியிருப்பதாகவும் ரபிஸி குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles