28.4 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

பாகான் டத்தோ தொகுதியில் எந்த மாற்றமும் இல்லை

பாகான் டத்தோவில் பரப்புரையில் கலந்து கொண்ட பிகேஆர் வேட்பாளர் Shamsul Iskandar Mohd Akin, இங்கு 27 ஆண்டுகள் எம்பியாக அமாட் ஸாஹிட் ஹமிடி இருந்தபோது, சொல்லும்படியான முன்னேற்றம் எதுவுவில்லை என்று தெரிவித்தார்.
அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் ஸாஹிட் ஹமிடி இருந்துள்ளதால், பாகான் டத்தோ நியுயார்க் போல முன்னேறிய தொகுதிதாக இருக்கும் என்று தாம் நினைத்ததாகவும் ஆனால், சாலைகளில் விளக்கு இல்லை, கால்வாய்கள் அடைபட்டும், வேலை வாய்ப்பு இல்லாமலும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறும்போது தலைவர்கள் சுத்தமானவர்களாகவும் ஊழலில் ஈடுபடாமலும் இருக்க வேண்டும். ஆனால், அமாட் ஸாஹிட்டின் நிலைமை நேர்மாறாக இருப்பதாகக் குறிபிட்டார்.
எனவே, பாகான் டத்தோ மக்கள் தங்களுக்கு ஊழலற்ற எம்பி வேண்டுமென்றால், பக்காத்தான் ஹராப்பானுக்கே வாக்களிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles