
திரெங்கானு மாநிலத்தில் வெள்ளத்தின் காரணமாக 34,383 பேர் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் வேளையில், அம்மாநில மந்திரி பெசார் Ahmad Samsuri Mokhtar ( அமாட் சம்சுரி மொக்தார்) தற்போது நியூ சிலாந்தில் விடுமுறையைக் கழித்து வருவது கடும் கண்டனத்துக்கு உள்ளானது.
டிசம்பர் மாதத்தில் மழை கடுமையாகி வெள்ளம் ஏற்படும் என்று தெரிந்திருந்தும் சம்சுரி விடுமுறையில் சென்றிக்கக் கூடாதென்றும், நிலைமை கடுமையாகி இருக்கும் நிலையில் அவர் உடனடியாக நாடு திரும்பி இருக்க வேண்டும்.
அது சம்பந்தமாக அவர் மாநில மக்களிடம் இன்னும் மன்னிப்பு கேட்கவில்லை என்பது ஒரு தலைவருக்கான பொறுப்பை உதாசீனம் செய்திருப்பதாகப் பலரும் விமர்சித்துள்ளனர்.



