
கோவிட் பெருந்தொற்றுக்கான சிகிச்சைக்கு செலவிடப்பட்ட 62,000 கோடி ரிங்கிட் அரசின் கருவூலக் கணக்கில் பதிவிடப்படவில்லை என்ற செய்தியில் உண்மையில்லை என்றும் அது போலி செய்தி என்று முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
யூசோப் பாச்சேக் என்ற நபர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில், முஹிடின் யாசின் மற்றும் இஸ்மாயில் சப்ரி ஆகியோரின் ஆட்சி காலத்தில் செலவிடப்பட்ட 62,000 கோடி ரிங்கிட் அரசின் கணக்கில் பதிவிடப்படவில்லை என்றும் அதனால்தான், அவ்விருவரும் அன்வார் ஆட்சிக்கு வர முடியாத வகையில் முட்டுக்கட்டை போட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இஸ்மாயில் சப்ரி மேலும் குறிப்பிடும்போது, மேற்கண்ட தொகையில் 53,000 கோடி ரிங்கிட்டானது 8 தொழில்துறை ஊக்குவிப்புக்கான நிதியுதவி என்றும் மொத்த செலவில் அரசின் நேரடி செலவானது வெறும் 1,000 கோடி ரிங்கிட் மட்டுமே என்றும் குறிப்பிட்டிருந்தார்.
