
பக்காத்தானுடன் ஏற்படுத்திக் கொண்ட தேசிய முன்னணியின் நல்லிணக்க ஒப்பந்தம் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும் என அம்னோ தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடி உறுதி கூறியுள்ளார்.
மலாய்க்காரர்கள், ஆட்சியாளர்கள், மலாய் மொழி, இஸ்லாம் ஆகியவற்றின் சிறப்புரிமை நல்லிணக்க ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதால், ஒப்பந்தம் நீடிப்பதில் பிரச்சினை எதுவுமில்லை என்று அவர் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதர நிலையைச் சீரமைத்து மக்கள் அனைவரும் சிறப்பான வாழ்க்கையை அனுபவிக்க முறையான திட்டங்களை வகுத்து, அமல்படுத்த அன்வார் இப்ராஹிமிற்கு தேசிய முன்னணி என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என்றும் பேட்டி ஒன்றில் ஸாஹிட் உறுதி கூறினார்.
