
பக்காத்தான் அரசின் கைப்பாவையாக இருந்து தம்மீது 1எம்டிபி வழக்கை நடத்திய முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தோமாஸ் மீது நஜிப் ரசாக் உயர்நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
தம்மீது கொண்டுவரப்பட்ட ஊழல் வழக்கானது நெடுங்காலமாகத் திட்டமிடப்பட்டு, கெட்ட எண்ணத்தில், பழி வாங்கும் நோக்கத்தில் பக்காத்தான் அரசு சுமத்தியதாக நஜிப் தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதே மாதிரியான அவரின் வழக்கை இவ்வாண்டு நவம்பர் 25ஆம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதி Ahmad Bache (அமாட் பாச்சே), தள்ளுபடி செய்திருந்தது.
டோமி தோமஸ் தமது கடமையையைத்தான் செய்திருப்பதாகவும், நஜிப்பின் மீது தனிப்பட்ட கெட்ட நோக்கம் எதுவும் அவருக்கு இல்லையென்றும் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.
