
பேராக் மாநிலத்தில் கண்ட கண்ட இடங்களில் இந்து, புத்த ஆலயங்களை அமைப்பதைத் தடுக்கும் வகையில் அது சம்பந்தமான விதிமுறைகள் வகுக்கப்படும் என மந்திரி பெசார் சராணி முகமட் தெரிவித்தார்.
அரசு நிலத்தில் ஆலயங்களை முறைப்படி அமைக்கவும் அதற்கான வழிகாட்டியை வகுக்கவும் செயற்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சட்டவிரோதமாக கட்டப்படும் ஆலயங்களை அகற்றவும் விதிமுறைகள் இயற்றப்படும் என்றும் சரானி அறிவித்தார்.
