26.4 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

பருவகால மாற்ற பேரிடரை எதிர்கொள்ள பினாங்கில் பல்வேறு நடவடிக்கைகள்

உலகளாவிய நிலையில் பருவகால மாற்றத்தினால் பேரிடர்கள் நிகழ்ந்து வருவதை அடுத்து, மாநிலத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் Jagdeep Singh Deo (ஜக்டீப் சிங் டியோ) தெரிவித்தார்.
மாநிலத்தில் 441,036 மரக் கன்றுகள் நடப்பட்டு, சாலைகளில் மொத்தம் 50,617 லெட் (LED) மின் விளக்குகள் பொருத்தப்பட்டு, ரொக்கமில்லா நிதி பரிவர்த்தனை அமல்படுத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
பினாங்கு வீடமைப்பு வாரியத்தில் உள்ள 9,000 வீடுகளுக்கான கட்டண வசூலிப்பு ரொக்கமில்லா பரிவர்த்தனையின் மூலமாக 23 அரசு ஏஜென்சிகளில் 72 விழுக்காடு பராமரிப்புக் கட்டணம் அதே நடைமுறையில் வசூலிக்கப்படுவதாகவும் ஜக்டீப் தெரிவித்தார்.
பினாங்கு மாநிலத்தில் திடக் கழிவினை அகற்ற நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு மாநிலத்தை வளப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles