
நாட்டில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், சீனாவில் வேகமாகப் பரவிவரும் கோவிட் தாக்கத்தால் நாட்டு மக்கள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் Noor Hishama Abdullah (நூர் ஹிஷாம் அப்துல்லா) கவலை தெரிவித்தார்.
32.7 மில்லியன் மக்கள் தொகையில் 49.8 விழுக்காடு அல்லது 16,278,036 பேரும் 1.9 விழுக்காடு அல்லது 626,896 பேர் இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டிருப்- பதாகத் தெரிவித்தார்.
எனவே, கோவிட் தாக்கத்திலிருந்து விடுபட முன்களப் பணியாளர்கள் கட்டாயமாக 2ஆவது பூஸ்டர் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள வேண்டுமென்றும் ஒன்றாவது இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளாதவர்கள் கட்டாயமாக அதனைச் செலுத்திக் கொள்ள வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
