
மெனாரா தொலைத் தொடர்பு கோபுரம் மூன்றாம் தரப்பாருக்கு விற்கப்பட்டதற்கு தாம் பொறுப்பாளி அல்லவென முன்னாள் தொடர்பு, பல்லூடக அமைச்சர் Anuvar Musa (அனுவார் மூசா) தெரிவித்தார்.
அந்த விவகாரம் தொடர்பாக தம்மிடம் தெரிவிக்கப்பட்டு பின்னர், அது தமது அமைச்சின் நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டது. அதன் பின்னர், அதற்குப் பொறுப்பான பொருளாதாரப் பிரிவின் அமைச்சர் முஸ்தாப்பா முகமட்டின் பார்வைக்கு அனுப்பப்பட்டது.
Musthapa Muhammad (முஸ்தாப்பா முகமட்டே) அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்குப் பொறுப்பு என்றும் அதற்கான விளக்கத்தை அவரே கூற வேண்டுமே ஒழிய, தமக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று அனுவார் மூசா தெரிவித்தார்.
