
சிலாங்கூர் அரசின் இலவச கோவிட்-19 பரிசோதனையில் பங்கேற்கும் 100 பேரில் நால்வர் நோய்த் தொற்று உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது உறுதி செய்யப்படுவதாக எஸ்.டி.எப்.ஒ. எனப்படும் சிலாங்கூர் மாநில நடவடிக்கை பணிக்குழு கூறியது.
சுகாதார அமைச்சின் சுகாதாரப் பணியாளர்கள் வரும் வரை இத்தகைய நோயாளிகள் காத்திருக்கும் தருணம்தான் மிகவும் ஆபத்தானதாக உள்ளது என்று அந்த பணிக்குழுவின் இயக்குநர் டாக்டர் முகமது ஃபர்ஹான் ரோஸ்லி கூறினார்.
சுகாதார அமைச்சின் பணியாளர்கள் வருவதில் ஏற்படும் தாமதம் காரணமாக பலர் தங்கள் உடல் நிலையை அறிந்து கொள்ள பரிசோதனைக்கு வருகின்றனர். பரிசோதனை இயக்கத்தில் கலந்து கொள்ளும் 100 பேரில் நால்வர் இத்தகைய தரப்பினராக உள்ளனர் என்றார் அவர்.
