28.5 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

தனித்து வாழும் தாய்க்கு பிபிஆர் வீடு ஏற்பாடு!

🔥 Views : 9
👁 Reading Now : 50

தென் செபராங் பிறை பத்து காவானில் வசிக்கும் தனித்து வாழும் தாயான 28 வயது சங்கரிக்கு,புக்கிட் மெர்தாஜாம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சிம் சீ கியோங் அவசர உதவிகளை வழங்கினார்.
இவரின் சார்பாக செபெராங் பிறை மாநகர் மன்ற உறுப்பினர் டேவிட் மார்ஷெல் நேரில் சென்று குடும்ப நிலவரங்களைக் கண்டறிந்து பண உதவியும்,பொருளுதவியும் வழங்கினார்.


இரண்டு பிள்ளைகளுக்கு தாயான சங்கரியின் வறுமை நிலையை கேட்டறிந்த அவர்,இவருக்கு பிபிஆர் வீட்டை ஏற்பாடு செய்ய கொடுக்கப் போவதாகவும் சொன்னார்.
மேலும் இதுபோன்ற பி40 குடும்பங்களுக்கு அரசாங்கம் பணம் வழங்கி உதவினாலும்,தேவைப்படும் சமயங்களில் கடைகளில் உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்வதற்கு உதவி அட்டை முறையை அமல்படுத்த வேண்டுமென டேவிட் மார்ஷெல் கோரிக்கையை முன் வைத்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles