
நாட்டில் தற்போது முடி திருத்தும் நிலையங்கள் மற்றும் பூக்கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மற்றும் மலேசியர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர் என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.
நாட்டில் முடிதிருத்தும் நிலையங்களை அதிக அளவில் இந்தியர்கள் வைத்திருக்கிறார்கள். ஏற்கெனவே இரண்டு முறை எம் சி ஓ உத்தரவால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கடை வாடகை கட்டணத்தை செலுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். கடைகள் மூடப்பட்டால் அதன் உரிமையாளர்கள் என்னதான் செய்வார்கள் என்று குலசேகரன் கேள்வியெழுப்பினார்.
Sop விதிமுறைக்கு உட்பட்டு முடிதிருத்தும் நிலையங்கள் செயல்பட அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும். அதேசமயம், பூக்கடைகள் அனைத்தும் குறிப்பிட்ட நேரத்தில் திறக்க அனுமதிக்க வேண்டும். இந்தியர்கள் மற்றும் சீனர்கள் தங்களது தெய்வங்களுக்கு தினசரி பூக்களை வைத்து வழிபடுவார்கள்.
மேலும் இறப்பு போன்ற காரியங்களுக்கு மாலைகள் அவசியம் தேவைப்படும் .
ஆகவே பூக்கடைகள் மற்றும் முடிதிருத்தும் நிலையங்கள் திறக்க அரசாங்கம் உடனடியாக அனுமதி வழங்க வேண்டுமென குலசேகரன் கேட்டுக்கொண்டார்.
தற்போது கேமரன் மலையில் இருந்து கொண்டு வரப்படும் பலவிதமான பூக்கள் கொட்டப்படும் காட்சிகள் பெரும் வேதனை அளிக்கின்றன.
கேமரன் மலையில் பூ வியாபாரம் செய்யும் வியாபாரிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
