34.6 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

இந்தியர் சார்ந்த பிரச்சினைகளைக் கவனிப்பது யார்?

🔊To listen to this news in Tamil, Please select the text.

காலம் காலமாக இந்திய சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு முடிவே இருக்காது போலத் தோன்றுகிறது.
இந்தியர்களின் வாழ்வில் ஒளிவிளக்கை ஏற்றும் என நம்பிக் கொண்டிருந்த அன்வாரின் அரசாங்கம் இதனைக் கண்டும் காணாதது போல இருப்பது அவரை நம்பி வாக்களித்த இந்திய சமூக பெரும் அதிருப்தியில் உள்ளது.
80 விழுக்காடு இந்தியர்கள் பக்காத்தானுக்கு வாக்களித்த வேளையில், இந்திய சமூகத்திற்கு ஒரு முழு அமைச்சர், இரு துணையமைச்சர் பதவிகளை ஒப்புக்காக அளித்தது எந்த வகையிலும் நியாயம் இல்லையென்று கூறப்படுகிறது.
இந்தியர் பிரச்சினைகளைத் தீர்ப்பது தமக்கு மட்டுமே பொறுப்பில்லாமல் அமைச்சரவையே பொறுப்பேற்க வேண்டுமென மனிதவள அமைச்சர் சிவகுமார் குறியிருப்பது தமக்கிருக்கும் பொறுப்பைத் கை கழுவி விடுவது போல் உள்ளது.
இந்நிலையில், இந்திய சமூகத்தை கைதூக்கி விட ஒற்றுமை அரசாங்கத்தின் திட்டம் என என்பதை பிரதமர் அறிவிக்க வேண்டும். அவற்றை நிறைவேற்ற அமைச்சர் ஒருவரை நியமிக்க வேண்டுமென பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது என்பதை இந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும்!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles