
🔊To listen to this news in Tamil, Please select the text.
டான்ஸ்ரீ ஷாரிர் அப்துல் சமாட் சம்பந்தப்பட்ட ஒரு மில்லியன் பணப் பரிவர்த்தனை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து நஜிப் ரசாக், அம்னோ தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடி, நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் ஆகியோரின் வழக்குகளையும் தள்ளுபடி செய்யப்பட வேண்டுமென அம்னோ உச்சமன்ற உறுப்பினர் Mohd Puad Zarkashi (முகமட் புவாட் ஸர்க்காசி) வலுயுறுத்தியுள்ளார்.
நஜிப் மற்றும் ஸாஹிட் ஹமிடி ஆகியோர் மீது அரசியல் பழி வாங்கும் வகையில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அவற்றைத் தள்ளுபடி செய்வதே நேர்மையான செயலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், நஜிப்பை குற்றவாளி என்று தீர்ப்பளித்திருக்கும் நீதிபதி Mohd Nazlan Mohd Ghazali (முகமட் நஸ்லான் முகமட் கஸாலி) மீது வழக்கைத் தொடர வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார்.


