
🔊To listen to this news in Tamil, Please select the text.
டத்தோஸ்ரீ ஹஜிஜி நூர் தலைமையிலான ஜி ஆர்எஸ்- தேசிய முன்னணி ஆட்சியைக் கவிழ்க்கும் வாரிசான் தலைவர் ஷாபி அப்டாலின் முயற்சி தோல்வியுற்றது.
அது சம்பந்தமான செய்தியாளர் கூட்டம் ஷாபி அப்டால், தேசிய முன்னணி சபாவில் தலைவர் புங் மொக்தாரின் தலைமையில் நடைபெறும் என்று நேற்று மாலை 4.30 மணிக்கு அறிவிக்கப்பட்டது. ஆயினும், அது நடத்தப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டது.
சபா ஆட்சிக் குழுவில் உள்ள 7 பிகேஆர் உறுப்பினர்கள் ஆட்சிக் குழு ஆட்சிக் கவிழ்ப்புக்கு இணக்கம் தெரிவிக்காததால், அந்த முயற்சி தோல்வியுற்றதாகத் தெரிகிறது.



