
🔊To listen to this news in Tamil, Please select the text.
எஸ்ஆர்சி வழக்கில் 12 ஆண்டு சிறைத் தண்டனையும் 21 கோடி ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தற்போது காஜாங் சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார்.
அத்தண்டனையிலிருந்து விடுபட அல்லது மீண்டும் அந்த வழக்கை விசாரிக்க ஐநா உரிமை மன்ற நடவடிக்கைக் குழுவிடம் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அவரின் வழக்கில் நீதி கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவரது வழக்கறிஞர் Shafee Abdullah (ஷாபி அப்துல்லா) ஐநா உரிமை மன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்திருப்பதோடு பிரதமர், சட்டத்துறை அலுவலைகம் ஆகியவற்றுக்கும் அதன் நகலை வழங்கியிருப்ப- தாகக் குறிப்பிட்டார்.
மேலும், எஸ்ஆர்சி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யவிருக்கும் கூட்டரசு நீதிமன்றத்திலும் தங்களது வாதத்தை வைக்கப் போவதாகவும் அதனை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்றும் ஷாபி தெரிவித்தார்.



