31.8 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

220 கிலோ தங்கக்கட்டிகள் விவகாரம்; அருண் துரைசாமி மீது குற்றச்சாட்டு!

🔥 Views : 5
👁 Reading Now : 34
To listen this news in Tamil, Click play button!

பத்துமலை ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்துக்கு சொந்தமான 220 கிலோ தங்கக் கட்டிகள் காணவில்லை என்று அவதூறு பரப்பியதாக அருண் துரைசாமி மீது இன்று செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது
செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நூர் ரஜியா மாட் சின் முன்னிலையில் தனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை 51 வயதான அருண் துரைசாமி மறுத்தார். கடந்த 2020 பிப்ரவரி ஆறாம் தேதி மாலை 4.27 மணிக்கு அருண் துரைசாமி இந்த அவதூறுகளை பரப்பியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் 6,000 வெள்ளி ஜாமினில் அருண் துரைசாமி விடுவிக்கப்பட்டுள்ளார். ஜூலை ஒன்றாம் தேதி இந்த வழக்கில் விசாரணைக்கு வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles