
மேம்பாட்டு திட்டங்களுக்காக பினாங்கு மாநில அரசாங்கத்தால் எடுத்துக் கொள்ளப்பட்ட தென் செபராங் பிறை பைராம் தோட்டத்தில் பாதிக்கப்பட்டக் குடும்பங்களுக்கு, பினாங்கு மாநில நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியின்படி அதன் கட்டுமானப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமியின் சிந்தனையில் உதித்த தோட்டப் பாட்டாளி மக்களுக்கான மாற்று வீடமைப்பு மாநில அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு,சுமார் 8.75 ஏக்கர் நிலப்பரப்பில் 76 வீடுகளை,பிடிசி எனப்படும் பினாங்கு மேம்பாட்டு வாரியம் இந்த கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்களுக்கு சொந்த வீடு கிடைக்கும் என்ற ஆவலில் பைராம் தோட்ட மக்கள் உள்ளனர்.



