
🔊To listen to this news in Tamil, Please select the text.
கடந்த டிசம்பர் 16ஆம் தேதி பத்தாங் காலி
கோஹ்த்தோங் ஜெயாவில் Father’s Organic Farm campsite in Gohtong Jaya நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் உடமைகளைக் களவாடிய அரசு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பொருள்களைக் களவாடிய 27 வயது நபர் கிள்ளான் பள்ளத்தாக்கில் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநில இடைக்காலப் போலீஸ் தலைவர் எஸ். சசிகலா தேவி தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் பற்றி பாதிக்கப்பட்ட நபரின் உறவினர் ஒருவர் முகநூலில் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவரின் மீது விசாரணை நடப்பதாக அறிவிக்கப்பட்டது.



