
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஜொகூர் பாரு, ஜாலான் செக்கெட்டில் இருக்கும் மஇகாவுக்குச் சொந்தமான 6 மாடிகள் கொண்ட கட்டடம் விற்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
டான்ஸ்ரீ பாசமாணிக்கம் மாநில மஇகா தலைவராக இருந்த காலத்தில், 1975ஆம் ஆண்டில் அந்தக் கட்டடம் எழுப்பப்பட்டு கட்சி சிறப்பாகச் செயல்பட உதவிய நிலையில், அக்கட்டத்திற்கு முன்புறத்தில் இரவுச் சந்தை நடத்தப்படுவதால், அலுவலகத்திற்கு செல்ல முடியாத நிலையில் அக்கட்டடம் விற்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
அதனை விற்ற பின்னர், வேறு கட்டடம் எதுவும் வாங்கப்படாதது ஏன் என்றும் அந்த விவகாரத்தை வெளிப்படையாகத் தெரிவிக்காமல் மாநில மஇகா மெளனம் சாதிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.



