
- 🔊To listen to this news in Tamil, Please select the text.
24 மணி நேரமும் செயல்படும் மதுபானக் கடைகளில் இரவு 10 மணிக்கு மேல் விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டுமென்ற பரிந்துரை குடிகாரர்களைத் திருத்த முடியாது என ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் குறிப்பிட்டார்.
ஸாஹிட் ஹமிடியின் இந்தியர் பிரதிநிதியான ரமேஸ் ராவ் அந்தப் பரிந்துரையை வெளிபடுத்தியுள்ளார். அதனை, ஏற்பதற்கில்லை என்று குறிப்பிட்ட குலசேகரன், நாட்டில் சட்டவிரோத மலிவுவிலை சம்சு விற்பனை அமோகமாக விற்கப்படுவதால், அதனைக் குடித்து இந்திய சமூக இளைஞர்கள் குடிகாரர்களாகத் திரிந்து, வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.
அம்மாதிரியான இளைஞர்களே சாலை விபத்துகளுக்கும், ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொள்வதற்கும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கும் காரணமாக அமைந்து விடுகின்றனர் என அவர் குறிப்பிட்டார்.
எனவே, இந்தச் சட்டவிரோத, மலிவு விலை மது விற்பனையை அரசு தடுக்க கடுமையான நடவடிக்கை எடுப்பதே சிறந்த வழியாக இருக்கும் என குலசேகரன் சுட்டிக் காட்டினார்.



