
🔊To listen to this news in Tamil, Please select the text.
நாட்டில் விலையேற்றத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் பி40 மற்றும் மிகவும் வறிய நிலையில் இருக்கும் மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்க அரசு Rahmah Payong ‘பாயோங் ரஹ்மா’ எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.
இத்திட்டத்தை உணவு பாதுகாப்பு அமைச்சின் முன்னெடுப்பில், உள்நாட்டு வர்த்தகம் வாழ்க்கைச் செலவின அமைச்சு, பொருளாதார விவகார அமைச்சு ஆகியவற்றின் ஒத்துழைப்பின் மூலம் அமல்படுத்தப்படும் என அமைச்சர் Salehudin Ayub (சலேஹுடின் அயூப்) தெரிவித்தார்.
உணவுக் கூடைகள் வழங்குவது, பத்து அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய பொட்டலத்தை ‘ரஹ்மா காசே சாயாங்’ மலிவு விலை விற்பனை நடத்துவது, பல்கலைக்கழக மாணவர்களுக்கு ‘கஃபே ரஹ்மா’ எனும் திட்டத்தை நடத்துவது போன்றவை இதில் அடங்கும் என அமைச்சர் தெரிவித்தார்.



