29.7 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

பக்காத்தான் தொடர்ந்து நிலைத்திருக்க பெரிக்காத்தானின் ‘நீல அலை’யைத் தடுக்க வேண்டும்

🔥 Views : 6
👁 Reading Now : 55

🔊To listen to this news in Tamil, Please select the text.

15ஆவது பொதுத்தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனலுக்கு ஆதரவாக ‘நீலஅலை’ எனும் நிலை தொடர்ந்து நேர்வதைத் தடுத்து நிறுத்தினால்தான் பக்காத்தான் நீடித்து நிலைக்கும் என பினாங்கு துணை முதல்வர் டாக்டர் பி. ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.
பொதுத்தேர்தலில் மலாய்க்கார இளைஞர்களின் அமோக ஆதரவினால் பெரிக்காத்தான் கெடா, பெர்லிஸ், திரெங்கானு, கிளந்தான் ஆகிய மாநிலங்களில் அமோக வெற்றியைப் பெற்றது.
மேலும், பேராக், பகாங் மாநிலங்களில் கணிசமான வெற்றியையும் பெற்றுள்ளது. இதனையடுத்து, கெடா, கிளந்தான், திரெங்கானு ஆகிய மாநிலங்களில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தல்களில் அங்கெல்லாம் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பக்காத்தானுக்கு மலாய்க்காரர்களின் ஆதரவு குறைந்த வண்ணமாக இருக்கும் நிலையில், மக்களைக் கவரும் வகையில் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தினால்தான் பக்காத்தானின் தலை தப்பும் என டாக்டர் ராமசாமி எச்சரித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles