
🔊To listen to this news in Tamil, Please select the text.
நடந்த முடிந்த 15ஆவது பொதுத்தேர்தலில் எதிர்பார்த்ததற்கு மாறாக அம்னோ படுதோல்வியை அடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
கட்சியில் பலரும் எதிர்த்த வேளையில், தமது சுலநலத்தை மனதில் கொண்டு பொதுத் தேர்தலை நடத்தியே தீர்வது என்ற பிடிவாதத்தை முன்னிருத்தி கட்சித் தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடி செயல்பட்டார்.
கட்சி படுதோல்வி அடைந்ததற்கு முழு காரணமே ஸாஹிட் ஹமிடிதான் என பெரும்பாலான உறுப்பினர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில், கட்சியில் மாற்றத்தைக் கொண்டுவரவும் கட்சியின் போராட்டத்தை முன்னெடுக்கவும் மேல்மட்ட இரு பதவிகளுக்கு போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதில் தலைவர் பதவிக்கு இஸ்மாயில் சப்ரி யாக்கோப், ஹிஷாமுடின் ஹுசேய்ன், கைரி ஜமாலுடின் ஆகியோர் போட்டியிடக் கூடும் என ஆரூடம் கூறப்படுகிறது.



