
🔊To listen to this news in Tamil, Please select the text.
பொதுத்தேர்தலின் பரப்புரையின்போது இந்திய சமூகத்தை மோசடி செய்து மில்லியன் கணக்கான நிதியை முறைகேடு செய்த மூன்று இந்திய அமைப்புகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அன்வார் இப்ராஹிம் கூறியதை மறந்து விட்டாரா என பெர்சத்துவின் இணைப் பிரிவின் தகவல் பிரிவுத் தலைவர் எஸ். சுப்ரமணியம் கேள்வி எழுப்பினார்.
மறைந்த துன் சாமிவேலுவினால் தொடங்கப்பட்டு, பெரும் நட்டத்தில் இயங்கிய மைக்கா ஹோல்டிங்ஸ் பின்னர், வேறொருவருக்கு கைமாற்றிக் கொடுக்கப்பட்டு, 25 ஆண்டுகளுக்குப் பின்னர் வெறும் 80 விழுக்காடு முதலீட்டுப் பணத்தை மட்டுமே இந்திய சமூகத்திற்கு வழங்கப்பட்டது.
அதே போன்று, மஇகாவினால் தொடங்கப்பட்ட மைக்கா ஹோல்டிங்ஸ், மாஜு கல்வி நிதி, மித்ரா போன்ற அமைப்புகளில் மோசடி நிகழ்ந்ததால் அந்த நிறுவனங்களின் நோக்கம் நிறைவேறாமல், இந்திய சமூகம் அதனால் எதிர்பார்த்த பயனை அடையவில்லை.
இந்த அமைப்புகளின் மீது அரசு விசாரணை நடத்தி, நிதி மோசடி செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்பது இந்திய சமூகத்தின் எதிர்பார்ப்பாக இருக்கும்போது, இதில் அன்வார் எப்போது நடவடிக்கை எடுக்கப் போகிறார் என சுப்ரமணியம் கேள்வி எழுப்பினார்.



