
🔊To listen to this news in Tamil, Please select the text.
அம்னோவில் மேல்மட்ட இரு பதவிகளுக்கு போட்டி இல்லையென்றால், இளைஞர்கள் அதிலிருந்து விலகுவர் என்று அரசியல் ஆய்வாளர்கள் Jeniri Amir (ஜெனிரி அமிரும்) அறிவியல் பல்கலைக்கழகத்தின் Fauzi Abdul Hamid (ஃபவுசி அப்துல் ஹமிட்)டும் குறிப்பிட்டுள்ளனர்.
அம்னோவில் ஜனநாயகம் இருப்பதை புலப்படுத்த மேல்மட்டப் பதவிகளுக்குப் போட்டியிருக்க வேண்டுமென்றும், பழைய ஊழல் தலைவர்கள் நீக்கப்பட்டு, கட்சியில் புதிய ரத்தம் பாய்ச்சப்பட வேண்டுமென்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
போட்டியைத் தவிர்த்தால், அது அம்னோவுக்குக் கேடாக முடியும் என்றும் ஊழல் தலைவர்களால்தான் அம்னோ தனது செல்வாக்கை இழந்து, வெறும் 26 தொகுதிகளை மட்டுமே தக்க வைத்துக் கொண்டு ஒற்றுமை அரசாங்கத்தில் கடைநிலையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
அம்னோ மீண்டும் செல்வாக்கை அடைய அதன் தலைமைத்துவம் மாற வேண்டுமென்றும் மேல்மட்டப் பதவிகளுக்குப் போட்டி நிச்சயமாக இருக்க வேண்டுமென்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.



