34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

அம்னோவின் தலைவராக ஸாஹிட் தொடர்ந்தால் அக்கட்சிக்கு விமோசனமே இல்லை

🔥 Views : 2
👁 Reading Now : 27

🔊To listen to this news in Tamil, Please select the text.

டத்தோஸ்ரீ அமாட் ஸாஹிட் ஹமிடியும் இன்னும் சில ஊழல் அரசியல் தலைவர்களும் அம்னோவில் தொடர்ந்து பதவி வகித்தால், அது அம்னோவுக்கு அழிவைத் தேடித்தரும் என்று மூத்த பத்திரிகையாளர் காடிர் ஜாசின் எச்சரித்தார்.
அம்னோவின் ஊழல்மிக்க தலைவர் நஜிப் ரசாக் மற்றும் ஸாஹிட் ஹமிடி ஆகியோரின் நேர்மையற்ற நடவடிக்கையினால் 14, 15ஆவது பொதுத்தேர்தல்களில் அம்னோ கடும் சரிவை அடைந்தது.
2004இல் அம்னோவுக்கு 109 தொகுதிகள் இருந்த நிலையில், 2008இல் 79ம், 2013இல் 88ம், 2018இல் வெறும் 26 தொகுதிகளையே வெற்றி கொள்ள முடிந்தது.
தற்போது, வேறு வழியில்லாமல் அம்னோ ஒற்றுமை அரசாங்கத்தில் இணைந்துள்ளதாகக் குறிப்பிட்ட காடிர் ஜாசின், அம்னோவின் பழைய, ஊழல் தலைவர்களை அகற்றி, இளம் தலைவர்களைப் பதவியில் அமர்த்தினால்தான் அது முன்பு போல செல்வாக்கையும் ஆட்சி அதிகாரத்தையும் அடைய முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles