31.1 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

சபா, சரவாக்கிற்கு சமமான ஒதுக்கீடு வேண்டும்

🔥 Views : 7
👁 Reading Now : 60

🔊To listen to this news in Tamil, Please select the text.

சபா, சரவாக்கும் முன்பு போல மலேசியாவின் மாநிலங்கள் இல்லையென்றும் அவை மலேசியாவின் பிராந்தியங்கள் என துணைப் பிரதமர் அமாட் ஸாஹிட் ஹமிடி கூறியுள்ளார்.
அவை பிராந்தியங்களாக இருப்பின், தீபகற்ப மலேசியாவுக்கு ஒதுக்கப்படும் நிதியைப் போன்றே அவற்றிற்கும் ஒதுக்கப்பட வேண்டும். மொத்த வருவாயில் தலா மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கீட்டைப் பெற வேண்டுமென Upko (அப்கோ) தலைவர் Wilfred Madius Tangau (வில்ஃப்ரட் மாடியுஸ் தாங்காவ்) வலியுறுத்தியுள்ளார்.
அதே போன்று, மொத்த நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையில், மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கையை அவ்விரு பிராந்தியங்களும் கொண்டிருக்க வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தினார்.
சபா, சரவாவும் தீபகற்ப மலேசியாவைப் போன்றே முழுமையான வளர்ச்சி பெறவும் அங்கு சிதிலமடைந்துள்ள பள்ளிகளின் சீரமைப்புக்கும் பூரணமான கட்டமைப்பு வசதிகளைப் பெறவும் இன்னும் 50 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கக் கூடாதென்றும் அவர் வலியுறுத்தினார்.
அப்கோ தலைவர் பதவியில் இருந்து விலகும் வில்ஃப்ரட் தாங்காவ், கட்சியின் பேராளர் மாநாட்டில் உரையாற்றும்போது அவ்வாறு குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles