
🔊To listen to this news in Tamil, Please select the text.
2012ஆம் ஆண்டு சிறப்புப் பாதுகாப்புச் சட்டமான சொஸ்மாவின் வழி குறைந்தது 100 பேர் எந்தவொரு விசாரணையும் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பது அராஜகம் என பினாங்கு துணை முதல்வர் டாக்டர் பி. ராமசாமி சாடியுள்ளார்.
பலர் 28 மாதங்களுக்கு மேலாக சிறையில் இருப்பதால், அவர்களின் குடும்பங்கள் வருமானமின்றி வாழ்க்கையை நடத்த மிகவும் சிரமப்பட்டு வருகின்றன.
இந்தக் கொடுங்கோண்மைமிக்க, நவீன காலத்திற்கு ஒவ்வாத சட்டத்தைத் திருத்த பக்காத்தான் கூட்டணி 15ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னர் வாக்குறுதி அளித்ததை நினைவுறுத்திய டாக்டர் ராமசாமி, அந்தச் சட்டத்தைத் திருத்துவதற்கு முன்னர் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைவரையும் விடுவிக்க வேண்டுமென அரசை கேட்டுக் கொண்டார்.
மேலும், தடுத்து வைக்கப்பட்டவர்களை விடுவிக்கவும் அரசின் கவனத்தையும் பொதுமக்களின் ஆதரவைப் பெறவும் அது சம்பந்தமான கவனயீர்ப்பை முன்னெடுக்க நாடு தழுவிய நிலையில் நடவடிக்கை எடுக்கப்படும் என டாக்டர் ராமசாமி அறிவித்தார்.
