
🔊To listen to this news in Tamil, Please select the text.
அந்நியத் தொழிலாளர் சேர்ப்புக்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டு அமலுக்கு வந்த பின்னர், மற்ற துறைகளுக்கும் ஆள் சேர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் தெரித்தார்.
தற்போது உற்பத்தி, கட்டுமானம், நிர்மாணிப்பு, தோட்டம், விவசாயம் மற்றும் சேவைத் துறைகளுக்கு 5 லட்சம் அந்நியத் தொழிலாளர்களைச் சேர்க்க விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இது பூர்த்தியான பின்னர், சில்லறை வர்த்தகத் துறைகளுக்குத் தொழிலாளர் சேர்ப்பு நடைபெறும் என்றும் அது பற்றி உள்துறை அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் சிவகுமார் தெரிவித்தார்.
