
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஜொகூர் பாரு பெண்கள் இடைநிலைப் பள்ளி ஒன்றில் ஜனவரி 19, 20ஆம் தேதிகளில் எஸ்பிஎம் தேர்வுப் பட்டறை நடத்தப்பட்டதில் மலாய்க்கார மாணவிகள் அழைக்கப்படாதது ஏன் என்ற கேள்வி டுடிட்டரில் பரவலாகப் பரவியதை அடுத்து, கல்வியமைச்சர் அதற்கு விளக்கத்தை அளித்துள்ளார்.
அந்தப் பயிற்சிப் பட்டறையில் இஸ்லாமிய கல்விப் பாடமும் கூடுதல் கணிதம், வேதியல் பாடங்களுக்கு வழிகாட்டுப் பயிற்சிகள் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், அது பற்றி விளக்கமளித்த அதற்கான கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக், அந்தப் பயிற்சிப் பட்டறைகள் பல இடம் பெறவிருப்பதாகவும், சீனப் பெருநாளைக் கொண்டாடும் மாணவிகளுக்குச் சிக்கலை ஏற்படுத்தாமல் இருக்க, முதல் பயிற்சிப் பட்டறையில் 30 மாணவிகள் மட்டுமே கலந்து கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்து நடக்கும் பட்டறைகளில் மற்ற மாணவிகள் அழைக்கப்படுவர் என தெரிவித்திருந்தார்.
இந்தப் பதிலை சில பெற்றோர்கள் ஏற்கவில்லை. இன்னும் பல பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படும் என்பதை முன்கூட்டியே மாணவிகளுக்குச் சொல்லப்- படாதது ஏன் என்றும் தவறு செய்த பின்னர் அதனை மூடி மறைக்கும் செயல் ஒற்றுமை அரசாங்கத்திலும் தொடரக் கூடாதென்றும் கேட்டுக் கொண்டனர்.
