34.6 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

சுங்கை வாங் பிளாசாவில் 11 வெளிநாட்டு வர்த்தகர்களின் கடைகளை மூட உத்தரவு

🔊To listen to this news in Tamil, Please select the text.

Sungei Wang plaza வணிக வளாகத்தில் 11 கடைகளில் வர்த்தகம் செய்துவந்த வெளிநாட்டு வர்த்தகர்களின் கடைகளை மூடும்படி கோலாலம்பூர் மாநகர் மன்றம் உத்தரவுவிட்டுள்ளது. நேற்று மாலை பின்னேரத்தில் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் அமலாக்கத்துறையினர் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வங்காளதேசிகள், பாகிஸ்தானியர்கள் மற்றும் மியன்மார் பிரஜைகள் விற்பனை செய்துவந்த ஜவுளி, காலணிகள், பேக், கை தொலைபேசி உபரி பாகங்கள் மற்றும் கணினி உபரி பொருட்களை விற்பனை செய்துவந்த 14 கடைகளில் திடீர் பரிசோதனை நடத்தப்பட்டதாக கோலாலம்பூர் மாநகர் மன்றம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles