
🔊To listen to this news in Tamil, Please select the text.
தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் தமிழ்ப் பள்ளிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அண்மையில் சீக்கியர் ஒருவர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சமூகத்தின் எதிர்ப்பு கொந்தளிப்பாக மாறியுள்ளது.
தமிழ் பேசும் ஒருவரே தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எடுத்துச் சொல்ல தகுதி பெற்றிருப்பதாக ஆணித்தரமாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தியர்களைப் பிரதிநிதித்து அமைச்சரவையில் இருக்கும் மனிதவள அமைச்சர் சிவகுமார் விடுத்திருக்கும் அறிக்கையில், தாம் கல்வியமைச்சர் Fadlina Sidek (ஃபட்லினா சீடேக்) கை சத்தித்து அது பற்றிப் பேசியதாகவும், விரைவில் ஆலோசனை மன்றத்தில் தமிழ் பேசும் ஒருவரை நியமிக்க அவர் சம்மதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.



