
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஒற்றுமை அரசாங்கத்தில் ஜசெகவின் இந்திய அமைச்சராக இருக்கும் வி. சிவகுமாரின் தன்மூப்பான நடவடிக்கைகள் இந்திய சமூகத்தைப் பாதிப்படைய வைத்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.
பக்காத்தானின் முந்தைய ஆட்சியின்போது,
எம். குலசேகரன் மனிதவள அமைச்சராக இருந்தபோது ஜசெகவின் வேம்பரசன், டி. கண்ணன் ஆகியோரை சொக்சோ வாரிய உறுப்பினர்களாக நியமித்திருந்தார். அதன் பின்னர் முஹிடின் அமைச்சரவையில் பதவிக்கு வந்த எம். சரவணன், மேற்கண்ட இருவரையும் நீக்கிவிட்டு அவர்களுக்குப் பதிலாக நெகிரி செம்பிலான் டாக்டர் தனலட்சுமி, கூட்டரசுப் பிரதேசத்தின் விஜயமோகன் கருப்பையா ஆகியோரை நியமித்தார்.
தற்போது சிவகுமார் அவர்களிருவரையும் நீக்கிவிட்டு, அவர்களுக்குப் பதிலாக ஜசெகவின் டத்தோ வேய் சுவான் பெங், மற்றும் குவான் பூன் டாட் ஆகியோரை நியமித்தது ஏன் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
அரசு நியமனங்களில் இந்தியர்களுக்கு இடமளிப்பது குதிரைக் கொம்பாக இருக்கும்போது, இருக்கின்ற பதவிகளை மற்ற இனத்திற்குத் தாரை வார்த்துக் கொடுத்திருக்கும் சிவகுமார் அதற்கான விளக்கத்தை சமூகத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டுமென வலியுறுத்தப்- படுகிறது.



