24.7 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

உணவகங்களின் பிரச்சினைகளை ரபிஸி முழுமையாக உணர்ந்து பேச வேண்டும்

🔥 Views : 10
👁 Reading Now : 69
rafizi ramli

🔊To listen to this news in Tamil, Please select the text.

அதிக விலையில் உணவை விற்கும் உணவகங்களைப் பயனீட்டாளர்கள் தவிர்க்க வேண்டுமென பொருளாதாரத் துறை அமைச்சர் ரபிஸி ரம்லி குறிப்பிட்டதை அடுத்து, உணவக உரிமையாளர்கள் அவரை விமர்சித்துள்ளனர்.
மூலப் பொருள்களின் விலை கணிசமாகக் குறைந்த நிலையில், உணவக உரிமையாளர்கள் உணவின் விலையைக் குறைக்காததை அவர் கடுமையாகச் சாடியிருந்தார்.
அதற்கு மறுமொழி கூறிய மைடின் முகமட் ஹோல்டிங்ஸின் இயக்குநர் Ameer Ali Mydin (அமீர் அலி மைடின்) தற்போது அத்தியாவசிய மூலப் பொருள்களான அரிசி, சமையல் எண்ணெய், சீனி, கோதுமை மாவு, மைலோ போன்றவற்றின் விலை 5லிருந்து 15 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
காய்கறிகள், மீன் போன்றவை பருவகாலத்திற்கு ஏற்றுவாறு அதிகரிப்பதோடு உணவகங்களின் இதர செலவுகளும் இரட்டிப்பாக கூடியிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், உணவுப் பொருள்களின் விலையைக் குறைப்பது எப்படி என்பதை ரபிஸி ரம்லிதான் விளக்க வேண்டுமென அமீர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles