26.4 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

டாக்டர் குணராஜ் ஜோர்ஜின் ஒற்றுமைப் பொங்கல் மிகச் சிறப்பாக நடைபெற்ற

🔥 Views : 8
👁 Reading Now : 29

🔊To listen to this news in Tamil, Please select the text.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மந்திரி பெசாரின் இந்தியர் பிரிவின் சிறப்பு ஆலோசகருமான மாண்புமிகு டாக்டர் குணராஜ் ஜோர்ஜின் ஏற்பாட்டில் ஒற்றுமைப் பொங்கல் சிறப்பாக நடத்தப்பட்டது.
அதில் பல்லின மக்கள் 400க்கும் அதிகமானோர் கலந்து சிறப்பித்தனர். அந்நிகழ்ச்சியில் இந்தியப் பாரம்பரிய உணவு வகைகள் வைக்கப்பட்டு, பல்வேறு இந்திய அம்சங்களைக் கொண்ட கலைநிகழ்ச்சியும் நடத்தப்பட்டன.
பொங்கல் வைக்கும் போட்டியில் முதல் பரிசை வென்ற கிள்ளான் ஜெயா அணிக்கு 1,000 ரிங்கிட்டும், இரண்டவது இடைத்தைப் பெற்ற புக்கிட் திங்கி அணிக்கு 700 ரிங்கிட்டும், மூன்றாவது இடைத்தைப் பெற்ற ஒற்றுமை அணிக்கு 500 ரிங்கிட்டும் வழங்கப்பட்டன.


இந்த நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற பெரிதும் உதவிய அரசு அமைப்புகள், அரசு சாரா இயக்கத்தினர், கோயில் நிர்வாகங்கள், குடியிருப்பாளர்கள், சீனக் கோயில் நிர்வாகங்கள், பள்ளிவாசல் நிர்வாகத்தினர், கோத்தா ராஜா பிகேஆர் செயலவை, செந்தோசா தொகுதி மக்களுக்கும் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தமது மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles