
🔊To listen to this news in Tamil, Please select the text.
1எம்டிபியின் பணத்தை சட்டவிரோதமாகப் பெற்றிருந்த 11 தனிநபர்கள், அரசியல் கட்சிகள், தொழில் நிறுவனங்களின் பணம் 21.7 மில்லியன் ரிங்கிட்டை ஊழல் தடுப்பு ஆணையம் 2021 ஜுனில் கையகப்படுத்தியது.
அந்தப் பணத்தைக் கையகப்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட்டதை அடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட அந்தப் பணத்தைத் திருப்பித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி காலத்தில் நஜிப் ரசாக்கினால் வழங்கப்பட்ட 1எம்டிபி பணம் 270 மில்லியன் ரிங்கிட்டை கையகப்படுத்த 41 தனிநபர், அரசியல் கட்சிகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது எம்ஏசிசி நடவடிக்கை எடுத்து, மேற்கண்ட பணத்தைக் கையகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
