
🔊To listen to this news in Tamil, Please select the text.
நாட்டின் 12 லட்சம் அரசு ஊழியர்களில் மலாய்க்காரர்களின் எண்ணிக்கை 90 விழுக்காடாக இருப்பதைக் குறைத்து இனங்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப வாய்ப்பு தர வேண்டுமென பினாங்கு துணை முதல்வர் டாக்டர் பி. ராமசாமி அறைகூவல் விடுத்திருந்தார்.
அதற்கு மறுமொழி கூறியிருக்கும் பிரதமர் அன்வார் இப்ராஹிம், அது ஒரு பிரச்சினையாக இல்லையென்றும் மலாய்க்கார ஆதிக்கத்தைக் குறைக்க அரசுக்கு எண்ணமில்லை என்றும் குறிப்பிட்டார்.
அது டாக்டர் ராமசாமியின் தனிப்பட்ட பரிந்துரை என்றும் அது ஜசெகவின் பரிந்துரை இல்லை என்பதால் அதனைப் பரிசீலிக்க வேண்டியதில்லை என்றும் அன்வார் குறிப்பிட்டார்.



